கட்சி நிர்வாகி கொலை: குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியை கொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.


விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியை கொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.
அரியலூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. இன்று சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வெற்றிசெல்வன் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் தலித் மக்கள் இனவெறியர்களால் கொலை செய்யப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. தலித் மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலையே உள்ளது. முன்னாள் மக்களவை உறுப்பினர் என்ற முறையிலும், கட்சியின் தலைவர் என்ற முறையிலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்யும் போது காவல் துறையினர் எனக்கு போதிய பாதுகாப்பு தருவதில்லை. என் மீது இனவெறியர்கள் 18 முறை கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எனவே சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழக அரசு போதிய அக்கறை செலுத்தாத நிலையே உள்ளது. தலித் மக்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...