பிளஸ் டூ: மதுரைக் கைதி 1200-க்கு 960 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி
பிளஸ் டூ பொதுத் தேர்வில் மதுரை சிறையில் உள்ள தண்டனைக் கைதி 1200-க்கு 960 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார்.


பிளஸ் டூ பொதுத் தேர்வில் மதுரை சிறையில் உள்ள தண்டனைக் கைதி 1200-க்கு 960 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார்.
மதுரை சிறையில் உள்ள தண்டனைக் கைதிகளில் 3 பேர் பிளஸ் டூ தேர்வை எழுதியிருந்தனர். அவர்களில் 2 பேர் ஏற்கெனவே தேர்வெழுதி தோல்வியடைந்த பாடங்களை எழுதினர். முழுப்பாடங்களையும் தேர்வு எழுதிய மதுரையைச் சேர்ந்த சீனிநைனா முகம்மது தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் தமிழ் 151, ஆங்கிலம் 154, வரலாறு 160, பொருளியல் 157, வணிகம் 161, கணக்கியல் 177 என மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இந்து அமைப்பின் பிரமுகர் கொலை உள்ளிட்டவற்றில் சம்பந்தப்பட்டதாக வழக்குத் தொடரப்பட்டவர். தண்டனை பெற்று கைதியாக உள்ள சீனிநைனா முகம்மது பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருப்பதற்கு சிறை அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்தனர். மேலும் இரு கைதிகள் ஏற்கெனவே தோல்வியடைந்த பாடங்களில் தேர்ச்சி பெற்றதாகவும் சிறை கண்காணிப்பாளர் ரா. அறிவுடை நம்பி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...