வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு : மின்வாரிய மின்தட ஆய்வாளரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல்

வேப்பங்குப்பம் அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய தினக்கூலி பணியாளர் இறந்ததற்கு காரணமான மின்வாரிய மின்தட ஆய்வாளரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள்

Updated On :4 மே 2015, 2:01 pm

வேப்பங்குப்பம் அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய தினக்கூலி பணியாளர் இறந்ததற்கு காரணமான மின்வாரிய மின்தட ஆய்வாளரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

ஒடுகத்தூரை அடுத்த எடத்தெருவை சேர்ந்தவர் செல்வம் (45).  அணைக்கட்டு மின்சார வாரிய அலுவலகத்தில் தினக்கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.   கடந்த ஏப்.25-ம் தேதி அங்குள்ள மின்மற்றி பழுதடைந்துள்ளதாக மின்வாரிய அலுவலகத்திற்கு பொதுமக்கள் சார்பாக புகார் செய்யப்பட்டுள்ளது.  அதன்பேரில் மின்மாற்றியை சரிசெய்ய செல்வத்தை, மின்வாரிய மின்தட ஆய்வாளர் (லைன் இன்ஸ்பெக்டர்) ரகு  அன்று இரவு அழைத்துச் சென்றுள்ளார்.      இரவு நீண்ட நேரமாகியும் செல்வம் வீடு திரும்பவில்லை.  பல இடங்களில் அவரது உறவினர்கள் தேடியுள்ளனர்.  அப்போது அங்குள்ள மின்மாற்றியில் மின்சாரம் பாய்ந்து இறந்த நிலையில் சடலமாக செல்வம் தொங்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது.   ஆனால் அவரை அழைத்து சென்ற ரகு அங்கு இல்லை.  அவர் தலைமறைவானது தெரியவந்தது.    இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீஸில் புகார் செய்யப்பட்டது.

ஆனால் போலீஸார் அவரை கைது செய்ய நடவடிக்கை ஏதும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அவ்வூர் பொதுமக்கள் வேலூர் - ஒடுக்கத்தூர் சாலையில் திங்கள்கிழமை ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   ரகுவை உடனடியாக கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தினர். தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.  ஓரிரு நாட்களில் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி கூறியதின் பேரில் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சுமார் ஒரு மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.