ஆம்பூர் அருகே மது போதையில் பைக்கில் சென்ற உதவி காவல் ஆய்வாளர் ஆட்டோ மீது மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தார்.
ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் காண்டீபன். இவர் மது போதையில் மோட்டார் பைக்கில் சென்றுள்ளார். ஆம்பூர் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தருகே சென்றபோது ஆம்பூர் நோக்கி சென்ற ஆட்டோ மீது மோதியுள்ளார். இவ்விபத்தில் ஆட்டோவின் முன்புறம் சேதமடைந்தது. ஆட்டோ டிரைவர் ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்த மணிவாசகம் (30) காயமடைந்தார். அவர் இதுகுறித்து ஆம்பூர் டிஎஸ்பி கணேசனிடம் புகார் கூறியுள்ளார்.
அவருடைய உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் காண்டீபனை ஆம்பூர் கிராமிய காவல் ஆய்வாளர் சி. பாபு ரவிச்சந்திரன் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றார். அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை செய்வதற்கு முன்னதாகவே உதவி ஆய்வாளர் காண்டீபன் எவருக்கும் தெரியாமல் அரசு மருத்துவமனையை விட்டு வெளியேறி சென்றுள்ளார். மது போதையில் விபத்து நடந்தபோது அவர் காவல் துறை சீருடையில் இருந்துள்ளார்.
காயமடைந்த ஆட்டோ டிரைவர் மணிவாசகம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆம்பூர் கிராமிய காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர்.
மேலும் அவர் பணியில் இருக்கும் போதே எப்பொழுதும் மது போதையில் இருப்பதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

