சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சிறுமி நுரையீரலில் புளியங்கொட்டை: அறுவைச் சிகிச்சை மூலம் அகறறம்

பள்ளிச் சிறுமியிóன் நுரையீரலில் சிக்கிய புளியங்கொட்டையை மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றினர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:17 am

ஜெயப்பாண்டி

பள்ளிச் சிறுமியிóன் நுரையீரலில் சிக்கிய புளியங்கொட்டையை மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றினர்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் உள்ளது புதுப்பட்டி. இவ்வூரைச் சேர்ந்தவர் சந்தனகுமார். கூலித்தொழிலாளி. இவரது 6 வயது மகள் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி புளியம் பழத்தை சாப்பிட்டபோது புளியங்கொட்டை சிறுமியின் வலது நுரையீரலில் சிக்கியது. நுரையீரலில் புளியங்கொட்டை சிக்கியதால் சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து ஏப்ரல் 24-ம் தேதி ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிறுமி சேர்க்கப்பட்டாள். காது, மூக்குத் தொண்டைப் பிரிவில் சிறுமிக்கு அறுவைச் சிகிóசசை இன்றி புளியங்கொட்டையை அகற்ற முயற்சித்தனர். ஆனால் புளியங்கொட்டை ஊதி பெரிதானதால் முடியவில்லை. இதனால் இருதய நுரையீரல் அறுவைச் சிகிச்சைப் பிரிவில் சிறுமி சேர்க்கப்பட்டாள்.

சிறுமிக்கு வலது நுரையீரலின் செயல்பாடு நிறுத்தப்பட்டு அறுவைச் சிகிச்சை மூலம் புளியங்கொட்டை அகற்றப்பட்டது. தற்போது பள்ளிச் சிறுமி நலமுடன் உள்ளார். அறுவைச் சிகிச்சையை இருதய நுரையீரல் அறுவைச் சிகிச்சைப் பிரிவு தலைவர் டாக்டர் என்.பாலநாயகம், முத்துவிஜயன், காது,மூக்குத் தொண்டைப் பிரிவு கே.தங்கராஜ் மற்றும் மயக்கவியல்துறை சிவபிரசாத், ஆர்.கவிதா ஆகியோர் மேற்கொண்டனர்.அறுவைச் சிகிச்சை குழுவினரை மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதிகயிலைராஜன் பாராட்டினார்.

சாதாரண புளியங்கொட்டையால் சிறுமிக்கு நுரையீரலில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் அளவு பாதிப்பு ஏற்பட்டதை பெற்றோர்கள் கவனமுடன் இருந்தால் தவிர்த்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.