திருச்சி மேலசிந்தாமணி அருகே மகனை தீயிட்டு கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.
மேலசிந்தாமணி அருகேயுள்ள சுப்ரமணியசாமி தெருவைச் சேர்ந்தவர் ராதகிருஷ்ணன். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவரது வாடகை வீட்டுக்கு சமையலர் கணேசன்(55)விஜயலட்சுமி(45) தம்பதியினர் குடிவந்தனர். இவர்களது ஒரே மகன் மணிகண்டன் (15).8-ம் வகுப்பு வரை படித்துவத்துள்ள இச்சிறுவன் மாற்றுத்திறனாளி. இந்நிலையில் கணேசன் சமையல் வேலைக்காக ஸ்ரீரங்கத்துக்கு சனிக்கிழமை இரவு சென்றுவிட்டார்.
வீட்டில் தாய்,மகன் மட்டுமே தனியாக இருந்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை இவர்களது வீட்டிலிருந்து புகை வந்ததை அறிந்த அப்பகுதியினர் கோட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து காவல் ஆய்வாளர் ஞானவேல் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது அங்கு தீயில் கருகிய நிலையில் விஜயலட்சுமியும், மணிகண்டனும் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், மணிகண்டனுக்கு 8-வயது இருக்கும் போது எலும்பு உருக்கி நோயால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து போனதாகவும், பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் அச்சிறுவன் குணமடைவில்லை எனவும், இதனால் அவரது பெற்றோர் மணிகண்டனுக்கு அனைத்து பணிவிடை செய்து வந்துள்ளனர் என்பது தெரியவருகிறது.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு கணேசன் சமையல் வேலைக்கு சென்ற பிறகு மணிகண்டன் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளதாகவும், இதனை பொறுக்க முடியாத விஜயலட்சுமி தனது மகனை தீவைத்து கொன்று தானும் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவருகிறது. இருப்பினும் போலீஸார் வழக்குப் பதிந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

