சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மதுரை: முன்விரோதத்தில் இளைஞர் வெட்டிக் கொலை

மதுரை சிந்தாமணி அருகேயுள்ளது அயனாபுரம். இவ்வூரைச் சேர்ந்த போஸ் மகன் ரமேஷ் (33). டைல்ஸ் பதிக்கும் கூலித் தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் ரமேஷுக்கும் பெண் பிரச்னை

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:55 am

ஜெயப்பாண்டி

மதுரை அருகே முன்விரோதம் காரணமாக வியாழக்கிழை இளைஞர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.

மதுரை சிந்தாமணி அருகேயுள்ளது அயனாபுரம். இவ்வூரைச் சேர்ந்த போஸ் மகன் ரமேஷ் (33). டைல்ஸ் பதிக்கும் கூலித் தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் ரமேஷுக்கும் பெண் பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.இந்தநிலையில் வியாழக்கிழமை காலையில் வேலைக்காக ரமேஷ் பனையூர் விலக்குப் பகுதியில் நடந்துவந்துள்ளார். அப்போது அங்குநின்ற லாரியின் பின்னாலிருந்து வந்த சிலர் திடீரென ரமேஷை கத்தி அரிவாளால் தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் பின்தலை உள்ளிட்ட இடங்களில் காயமடைந்த ரமேஷை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே ரமேஷ் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

இக்கொலை குறித்து அவனியாபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து சிலரைப் பிடித்து விசாரித்துவருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.