நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்2 போதுத்தேர்வில் 22822 பேர் பங்கேற்று எழுதுகிறார்கள் 

தமிழகம் முழுவதும் பிளஸ்2 தேர்வு (இன்று) வியாழக்கிழமை தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து இத்தேர்வு இம்மாத இறுதி வரையில் நடைபெற இருக்கிறது. இம்மாவட்டத்தில் 192 பள்ளிகளைச் சேர்ந்த

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:52 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வில் 22822  மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுத இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புதன்கிழமை தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் பிளஸ்2 தேர்வு (இன்று) வியாழக்கிழமை தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து இத்தேர்வு இம்மாத இறுதி வரையில் நடைபெற இருக்கிறது. இம்மாவட்டத்தில் 192 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 75 தேர்வு மையங்களில் 22,372 மாணவ, மாணவிகளும், 450 தனித்தேர்வர்களும் என மொத்தம் 22822 பேர் எழுத இருக்கின்றனர். இத்தேர்வு காலையில் 10.15 மணி முதல், பிற்பகல் 1.15 மணி வரையில் நடைபெற இருக்கிறது.

இதற்காக 3 கல்வி மாவட்டங்களில் 10 வினாத்தாள் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முறை மாணவ, மாணவிகள் துண்டுச் சீட்டுக்கள் மூலம் பார்த்து எழுவதை தடுக்க செய்கைகள் அனைத்தும் மேற்பார்வையாளர்களின் பார்வைக்கு படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில் இருந்து, ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு மணிநேரத்திற்குள் சென்று சேரும் வகையில் குறிப்பிட்ட வழித்தடம் வழியாக விநியோகிக்க காவலர்கள் பாதுகாப்புடன் 16 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், தேர்வு முடிந்ததும் வினாத்தாள் கட்டுக்கள் அனைத்தையும் அதே வாகனம் மூலம் சேகரித்து பாதுகாப்பாக வைப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டத்தில் தலா ஒரு மையத்தில் விடைத்தாள்களை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வினாத்தாள் மையங்கள் மற்றும் விடைத்தாள் வைக்கப்படும் மையங்களில் 24 மணிநேரமும் ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர். மேலும், ஏற்கனவே இத்தேர்விற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தேர்வு மையங்களில் செய்யப்பட்டு  தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.