நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

விருதுநகர் அருகே வாகனத்தில் கடத்திய 29 வெடிமருந்து மூடைகள் பறிமுதல்

விருதுநகர் அருகே அனுமதியின்றி வாகனத்தில் கடத்திச் சென்ற வெடிபொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் 29 மூடை மணிமருந்துகளை பறிமுதல் செய்தனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:52 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே அனுமதியின்றி வாகனத்தில் கடத்திச் சென்ற வெடிபொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் 29 மூடை மணிமருந்துகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாகன ஒட்டுநரையும் புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் அருகே ஆமத்தூர்-மூளிப்பட்டி சாலை வழியாக இரவு நேரங்களில் பட்டாசுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை வாகனங்களில் கடத்திச்செல்லப்படுவதாக மாவட்ட எஸ்.பிக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில்  உடனே நடவடிக்கை எடுக்குமாறு ஆமத்தூர் காவல் நிலைய போலீஸாருக்கு செவ்வாய்கிழமை உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் காவ்ல ஆய்வாளர் ராமநாராயணன் தலைமையில் குறிப்பிட்ட சாலையில் புதன்கிழமை அதிகாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை மறித்து சோதனையிட்டனர். அதில் பட்டாசுகள் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் 29 மூடை மணி மருந்துகள் இருப்பது தெரியவந்தது.

உடனே இது தொடர்பாக மூளிப்பட்டியைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் கண்ணனிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது இப்பகுதியில் இருந்து மூளிப்பட்டி பகுதியில் மிக்கி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலைக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல் தெரிவித்தாராம். இது குறித்து ஆமத்தூர் காவல் நிலைய போலீஸார் வாகன ஓட்டுநரான கண்ணனை கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.