காரியாபட்டி அருகே ரூ.1.70 லட்சம் மோசடி செய்ததாக ஒருவர் மீது வழக்கு பதிவு
காரியாபட்டி அருகே நிலம் வாங்கி பணம் கொடுக்காமல் ரூ.1.70 லட்சத்தை மோசடி செய்ததாக ஒருவர் மீது புதன்கிழமை வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


காரியாபட்டி அருகே நிலம் வாங்கி பணம் கொடுக்காமல் ரூ.1.70 லட்சத்தை மோசடி செய்ததாக ஒருவர் மீது புதன்கிழமை வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிழக்குத்தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மலையடியான்(40). இப்பகுதியில் இவருக்குச் சொந்தமான 110 சென்ட் நிலம் உள்ளது. இக்குறிப்பிட்ட நிலத்தை காரியாபட்டி அருகே ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்த மாரநாடு மகன் செந்திக்குமார் என்பவருக்கு ஒப்பந்தம் பேசியுள்ளனர். அதை உறுதி செய்து கொள்வது போல் முன்பணமாக ரூ.20 ஆயிரமும் மலையடியான் பெற்றுக் கொண்டாராம்.
இந்நிலையில் பத்திர பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்தும் கொடுத்துள்ளார். அப்போது, நிலத்திற்கான தொகையாக ரூ.1.70 லட்சத்தை அரசுடமை வங்கியின் காசோலையாக அளித்துள்ளார். இதை வங்கியில் கொடுக்காமல் ரொக்கப் பணம் கொடுத்ததும் திருப்பிக் கொடுக்கும் படியும் செந்தில்குமார் கூறினாராம். ஆனால், குறிப்பிட்ட நாள்கள் கடந்த பின்னரும் பணம் கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்தாராம். இந்நிலையில், செந்தில்குமாரை நேரில் சந்தித்து பணம் கேட்டாராம், அதற்கு அடிக்கடி தொல்லை தரக்கூடாது என்றும், மீறி கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இது தொடர்பாக காரியாபட்டி காவல் நிலையத்தில் மலையடியான் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...