நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

விருதுநகர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு முகப்புத்தாள் தைக்கும் பணி மும்முரம்

விருதுநகர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முகப்புத்தாளுடன் விடைத்தாள் இணைத்து தைக்கும் பணி அந்தந்த பள்ளிகளில்  மும்முரமாக நடந்து வருவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:51 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முகப்புத்தாளுடன் விடைத்தாள் இணைத்து தைக்கும் பணி அந்தந்த பள்ளிகளில்  மும்முரமாக நடந்து வருவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

 இம்மாவட்டத்தில் பிளஸ்2-ம் தேதி மார்ச் 5-ம் தேதி முதல், தொடர்ந்து இம்மாத இறுதி வரையில் நடைபெற இருக்கிறது. அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19-ம் தேதி முதல், ஏப்ரல் 10-ம் தேதி வரையிலும்  நடைபெறவுள்ளது. இதில், பிளஸ்2 தேர்வு தொடங்க இடையில் ஒரு நாளே உள்ளதால் அதற்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளன.

இதற்கிடையே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பணிகளை பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ளது. இத்தேர்வை விருதுநகர், அருப்புக்கேட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 335 பள்ளிகளில் இருந்து 30,170 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத இருக்கின்றனர். இதற்காக, இம்மாவட்டத்தில் 98 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 10-ம் வகுப்பிற்கான முகப்புத்தாள் சீட்டுக்களுடன், விடைத்தாள்களும் அந்தந்த கல்வி மாவட்டங்களில் இருந்து பள்ளிகளுக்கு கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
  
தற்போது, அந்தந்த பள்ளிகளில் மாணவர் புகைப்படம், பெயர், பாடக்குறிப்பு ஆகிய விவரங்கள் அடங்கிய முகப்புத்தாளுடன், விடைத்தாள்களை இணைத்து தைக்கும் பணி மும்முரமாக நடந்து வருவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.