நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

விருதுநகர் அருகே கூட்டுறவு வங்கி மேலாளருக்கு  கொலை மிரட்டல்: ஒருவர் கைது

விருதுநகர் அருகே மத்திய கூட்டுறவு வங்கியின் பெண் அதிகாரியை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீஸார் ஒருவரை செவ்வாய்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:51 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே மத்திய கூட்டுறவு வங்கியின் பெண் அதிகாரியை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீஸார் ஒருவரை செவ்வாய்கிழமை கைது செய்தனர்.

விருதுநகர் அருகே சின்னையாபுரத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கிளை மேலாளராக சுந்தரேஸ்வரி(36) என்பவர் பணியாற்றி வருகிறார். இக்கிராமத்திற்கு அருகே உள்ள வீரார்பட்டியைச் சேர்ந்த தங்கவேலின் மகன் பழனிச்செல்வம்(40). இவ்வங்கியில் இவரது கணக்கில் கடந்த 17.12.2013ல் 5 சவரன் நகையை அடமானம் வைத்து ரூ.40 ஆயிரம் பெற்றுச் சென்றாராம. இந்நிலையில் தவணை தவறிய நிலையில், விரைவில் பணம் செலுத்துவதை வலியுறுத்தும் வகையில் அலுவலகத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பியும் இருந்தனர்.
இதையறிந்த பழனிச்செல்வத்தின் உறவினர்கள் வங்கியில் பணம் செலுத்திவிட்டு மேற்குறிப்பிட்ட நகையை பெற்றுச் சென்றார்களாம்.

இதையறிந்த பழனிச்செல்வம், திங்கள்கிழமை பணி முடிவதற்கு முன்பாக வங்கியில் மேலாளர் அறைக்கு சென்றாராம். அங்கு பணியில் இருந்த சுந்தரேஸ்வரியிடம் கத்தியை காண்பித்து நகையை கொடுக்க வேண்டும், இல்லையென்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியும் உள்ளார். இதையடுத்து அங்கு பணியில் இருந்தவர்கள் ஓடி வர வாசல் வழியே தப்பியோடினாராம். இது தொடர்பாக உடனே சுந்தரேஸ்வரி வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தி்ல் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து கிராமத்தில் தலைமறைவாக இருந்தவரை போலீஸார் கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.