நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

விருதுநகர் அருகே இளம்பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி: இளைஞர் கைது

விருதுநகர் அருகே இனாம்ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தராஜின் மகள் செல்வி(25). மனநலம் பாதிக்கப்பட்டவர். இதே ஊரைச் சேர்நத பெரியய்யன் மகன் அன்வர்சாமி(29). இவருக்கு

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:51 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றதாக இளைஞர் ஒருவரை சூலக்கரை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் அருகே இனாம்ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தராஜின் மகள் செல்வி(25). மனநலம் பாதிக்கப்பட்டவர். இதே ஊரைச் சேர்நத பெரியய்யன் மகன் அன்வர்சாமி(29). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் டிராக்டர் டிரைவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் பெற்றோர்கள் தோட்டத்திற்கு சென்ற நிலையில் செல்வி மட்டும் வீட்டில் இருந்தாராம். அப்போது, அன்வர்சாமி வீட்டிற்குள் புகுந்து செல்வியை சில்மிஷம் செய்து மானபங்கம் செய்ய முயன்றாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி உடனே சத்தம் போட்டுக் கொண்டே தெருப்பக்கம் ஓடி வந்தாராம். இதைப்பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வருவதற்குள் தப்பியோடினாராம்.

இது தொடர்பாக ஆனந்தராஜ் சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து அன்வர்சாமியை கைது செய்தனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.