சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விருதுநகரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பேரணி

மத்திய அரசு நிலம் கையகப்படுத்தும் சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் பங்கேற்ற  பேரணி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:52 am

எஸ். பாண்டியன்

மத்திய அரசு நிலம் கையகப்படுத்தும் சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் பங்கேற்ற  பேரணி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடந்த பேரணிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் குருசாமி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் பங்கேற்று பேரணியை தொடங்கி வைத்தார். இப்பேரணி பஜார், தெப்பக்குளம், எம்.ஜி.ஆர் சிலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக ஆட்சியர் அலுவலக வளாகத்தை அடைந்தது. பின்னர் மத்திய அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் கொண்டு வந்துள்ள திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமியிடம் அளித்தனர்.

இப்பேரணியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் விஜயமுருகன், மா விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமச்சந்திரராஜா, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அம்மையப்பன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.