டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விருதுநகர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலி பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்பு

விருதுநகர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:52 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

இது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வருவாய் வட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், மண்டபசாலை குறுவட்டத்தில் உள்ள பரட்டநத்தம், குருணைக்குளம், சலுக்குவார்பட்டி கிராமங்கள், பரளச்சி குறுவட்டத்தில் வடக்குநத்தம், கணக்கி, தொப்பலாக்கரை, தெற்குநத்தம், புரசலூர், கள்ளக்காரி, போன்ற கிராமங்களில் கிராம உதவியாளர் காலி பணியிடங்களுக்கு தகுதியுள்ள பணிநாடுநர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

எஸ்.டி(பொது முன்னுரிமை), பி.சி(முன்னுரிமை), பி.சி(முன்னுரிமையற்றவர்), எம்.பி.சி, என்.டி.சி(பொது-முன்னுரிமையற்றவர்), எம்.பி.சி, டி.என்.சி(பெண்கள்-முன்னுரியற்றவர்) ஆகியோர் மேற்குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பிக்கலாம்.இதில் பொதுப்பிரிவைச் சார்ந்தோருக்கு 21வயது முதல் 30 வயதிற்குள்ளும், எம்.பி.சி, டி.என்.சி, பி.சி மற்றும் எஸ்.டி ஆகியோருக்கு 21 வயது முதல் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். அருப்புக்கோட்டை வட்டத்திற்குள் வசிப்போர் மட்டும் முன்னுரிமையற்ற இனத்திற்கும், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முன்னுமையுள்ள இனத்திற்கும் விண்ணப்பம் செய்யலாம். இப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோரும், செய்யாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இப்பணிக்கு குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, தமிழில் எழுதவும் பேசவும் தெரிந்திருப்பதோடு மிதிவண்டி ஓட்டவும் தெரிந்திருக்க வேண்டும். எனவே மேற்குறிப்பிட்ட தகுதியுடையோர் தங்கள் புகைப்படத்துடன் கூடிய சுயவிவரம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அறிவிக்கும் நாளில் இருந்து ஜூலை-10ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ அனுப்பி வைக்க வேண்டும். குறிப்பிட்ட நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.