டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விருதுநகர் அருகே பூட்டிருந்த வீட்டிற்குள் புகுந்து 11 சவரன் நகை திருட்டு

விருதுநகர் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 11 சவரன் நகையை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:52 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 11 சவரன் நகையை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே பஞ்சாயத்து யூனியன் காலனியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(62). இவர் மணிநகரம் கூட்டுறவு பால்பண்ணையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு தனது மகன், மனைவி ஆகியோருடன் மொட்டைமாடியில் தூங்கினார்களாம்.பின்னர், செவ்வாய்கிழமை காலையில் எழுந்து வந்து பார்த்துள்ளனர். அப்போது, கதவு பூட்டு நெம்பியிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல், உள்ளே சென்று பார்க்கையில் பீரோவும் கம்பியால் நெம்பி உள்ளேயிருந்த 10 சவரன் நகையை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தை அடுத்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களுடன் விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து இரவு நேரத்தில் வீ்ட்டிற்குள் புகுந்து 10 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.