/

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது

செந்துறை அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:49 am

பி.எஸ்.மீனாட்சிசுந்தரம்

செந்துறை அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம், வங்காம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், லட்சுமி தம்பதியின் மகள் மோனிஷா(15), இவர் குமுழூர் பள்ளியில் பத்தாம் வகுப்பு  படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மோனிஷா பள்ளிக்குச் சென்று திரும்பி வந்த போது அதை ஊரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மணிவண்ணன்(19) ஆனைவாரி ஓடைக்கு மோனிஷாவை அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து கேட்டதற்கு மணிவண்ணனின் தந்தை மாரிமுத்து மற்றும் மாமா சுப்பிரமணியன் ஆகியோர் தனலட்சுமியை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.

இது குறித்து தனலட்சுமி அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின்பேரில் ஆய்வாளர் ஷர்மிளா வழக்குப் பதிந்து மணிவண்ணனை கைது செய்தார், மேலும், மாரிமுத்து, மற்றும் சுப்பிரமணியனை தேடி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.