வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நீக்குமாறு சோனியாவை சந்தித்து முறையிட வேலூர் மாவட்ட காங்கிரஸார் முடிவு

காங்கிரஸ் கட்சியின் விதிமுறைகளுக்கு முரணாக செயல்படும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நீக்குமாறு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா

Updated On :24 ஜூன் 2015, 9:48 am

காங்கிரஸ் கட்சியின் விதிமுறைகளுக்கு முரணாக செயல்படும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நீக்குமாறு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தியை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளதாக வேலூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஒப்புதலின் பேரில் வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுபாளர் பாலவரதன் சில நாட்களுக்கு முன்பு மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளை நியமிóத்து நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார்.

இந்நிலையில் வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவராக இருந்த ச. பிரபு தலைமையில் பழைய நிர்வாகிகள் ஆம்பூரில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:-

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சட்ட திட்டங்களுக்கு முரணாக மாநில தலைவர் இளங்கோவன் செயல்படுகிறார்.   24 மாவட்ட தலைவர்கள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளனர்.  வேலூர் மேற்கு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களுக்கு மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்படவில்லை. வேலூர் மேற்கு மாவட்டத்திற்கு பொறுப்பாளராக பாலூர் சம்பத் ஏற்கனவே நியமிக்கப்பட்டார்.  அவர் எப்போது அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் என்பது தெரியவில்லை. இந்நிலையில் வாணியம்பாடியை சேர்ந்த பாலவரதன் தற்போது வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர் நிர்வாகிகளை நியமிக்க காங்கிரஸ் கட்சியின் சட்ட விதிகளில் இடமில்லை.  இவ்வாறான நிலையில் மாநில தலைவர் இளங்கோவனின் ஒப்புதலுடன் மாவட்ட பொறுப்பாளர், நிர்வாகிகளை நியமித்துள்ளது செல்லாது.  ஏற்கனவே உள்ள நிர்வாகிகள் தொடர்ந்து செயல்படுவார்கள்.  புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளை நாங்கள் செயல்படவிடமாட்டோம். 

புதிதாக நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டவர்களில் சிலர் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்கள், சிலர் கட்சியிலிருந்து வெளியேறி வேறு கட்சியில் இணைந்து பிறகு அங்கிருந்து வெளியேறி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்கள்.  அவ்வாறு நீக்கப்பட்டவர்களும், வெளியேறி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்களையும் இதுவரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கட்சியில் அதிகாரபூர்வமாக சேர்த்துக் கொள்ளவில்லை.  புதிதாக வெளியிடப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அங்கீகரிக்கப்பட்ட மாவட்ட தலைவரால் வெளியிடப்படவில்லை.   அதனால் அது செல்லாது. 

வேலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி அழியும் நிலையில் உள்ளது.  நாங்கள் கட்சியை பாதுகாக்க நினைக்கிறோம்.  கட்சி விரோத போக்கிலும், கட்சி விதிமுறைகளுக்கு முரணாக செயல்படும் மாநில தலைவர் இளங்கோவனை நீக்க முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தியை விரைவில் சந்தித்து முறையிட இருக்கிறோம் என ச. பிரபு தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.