அதோடு, விருதுநகர் அருகே இனாம்ரெட்டிபட்டியில் ஒரேநாள் இரவில் கோபால்சாமி, ராமசாமி ஆகியோர் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் நகையை பறித்துச் சென்றது. அதேபோல், மதுரை தல்லாகுளத்தில் தொடர்ந்து 3 வீடுகளிலும் திருடிய வழக்குகளில் தொடர்புள்ளதும் தெரியவந்தது. உடனே அவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் 22 சவரன் நகை, வெள்ளிப்பொருள்கள், மடிக்கணினி, கேமரா-2, விலையுயர்ந்த செல்லிடபேசிகள், கைக்கடிகாரங்கள், மயக்க மருந்து குப்பி, கையுறைகள், முகமூடிகள், கத்தி, பூட்டுகளை உடைப்பதற்காக நவீன பொருள்கள், கத்தி உள்ளிட்டவைகளையும் சூலக்கரை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அவர்கள் 3 பேரையும் கைது செய்து திருட்டு வழக்கு தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.