விருதுநகரில் சிறுமியை மானபங்கம் செய்ய முயன்றவர் கைது
விருதுநகரில் கழிப்பறைக்கு சென்ற சிறுமியை வழிமறித்து மானபங்கம் செய்ய முயன்ற இளைஞரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.


விருதுநகரில் கழிப்பறைக்கு சென்ற சிறுமியை வழிமறித்து மானபங்கம் செய்ய முயன்ற இளைஞரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
விருதுநகர் காந்திபுரம் தெருவைச் சேர்ந்த வீரச்செல்வியின் மகள்(11). இவர் இப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-வது வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை வீட்டுக்கருகே உள்ள கழிப்பறை வளாகத்திற்கு சென்றாராம். அப்போது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த செந்தில்குமார்(27) என்பவர் வழிமறித்து மானபங்கம் செய்ய முயன்றாராம். அதைத் தொடர்ந்து சிறுமி அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்ததை அறிந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடினாராம்.
இது தொடர்பாக சிறுமியின் தாயார் வீரச்செல்வி விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...