டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விருதுநகர் அருகே அனுமதியின்றி கல்குவாரியில் பதுக்கிய வெடிபொருள்கள் பறிமுதல்: 2 பேர் கைது

விருதுநகர் அருகே கல்குவாரியில் அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த வெடிபொருள்களான டெட்டனேட்டார் மற்றும் ஜெலட்டின் குச்சிகளை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:46 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே கல்குவாரியில் அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த வெடிபொருள்களான டெட்டனேட்டார் மற்றும் ஜெலட்டின் குச்சிகளை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

விருதுநகர் அருகே கோட்டையூர் கிராமத்தில் உள்ள கல்குவாரிகளில் அனுமதியில்லாமல் வெடிபொருள்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசில தகவல் வந்தது. அதன் அடிப்படையில் ஆய்வாளர் சாந்தாலட்சுமி தலைமையில் போலீஸார் புதன்கிழமை அதிகாலையில் கல்குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், சுரேஷ்குமார் என்பவரது குவாரியில் சோதனை செய்த போது அனுமதியின்றி ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டார் ஆகியவை இருப்பது ஆய்வில் தெரியவந்தது.

உடனே அங்கிருந்து 200 ஜெலட்டின் குச்சிகள், 100 டெட்டனேட்டார்கள் உள்ளிட்ட வெடிபொருள்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து கல்குவாரியின் உரிமையாளர் சுரேஷ்குமார்(33), பணியாளர் குமார்(29) ஆகியோரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.