விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஆய்வக நுட்புநர் பணியிடத்திற்கு பரிந்துரை
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஆய்வக நுட்புநர் நிலை-3 பணிக்காலியிடங்களுக்கு தகுதியானவர்கள் பரிந்துரை செய்யப்பட இருக்கின்றனர்.


விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஆய்வக நுட்புநர் நிலை-3 பணிக்காலியிடங்களுக்கு தகுதியானவர்கள் பரிந்துரை செய்யப்பட இருக்கின்றனர்.
இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:
சென்னை மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம் ஆய்வக நுட்புநர் நிலை-3 காலியிடம் தொடர்பாக அறிவிப்பு செய்துள்ளது. இப்பணிக்கு பிளஸ்2 தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்வித்துறை இயக்கத்தால் வழங்கப்பட்ட லேப் டெக்னாலஜி படித்து தேர்ச்சி பெற்றும் அல்லது செங்கல்பட்டு மத்திய தொழுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் சி.எம்.எல்.டி முடித்தவர்களும் தகுதியுடையராவர்.
மேலும், எஸ்.சி., எஸ்.சி.எ, எம்.பி.சி, பி.சி, பி.சி.எம் ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. ஓ.சி. பிரிவினருக்கு 18 வயது முதல் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். உத்தேச பதிவு மூப்பு விவரம்: முன்னுரிமை பிரிவினர்(அனைத்து பிரிவினர்)-12.6.2015 வரையிலும் இருக்க வேண்டும். அதேபோல், முன்னுரிமையற்றோர் பிரிவினருக்கு எஸ்.சி.எ, எஸ்.டி(பொது) முன்னுரியற்றோர்-12.6.2015 வரையிலும், பிற்பட்ட வகுப்பினர்(முஸ்லீம் பொது)-25.9.2009 வரையும், இதர பிரிவினர் (எஸ்.சி, எம்.பி.சி, பி.சி, ஜி.டி) அனைத்தும்-19.8.2009 வரையும் பதிவு செய்திருக்க வேண்டும்.
எனவே மேற்குறிப்பிட்ட பதிவு மூப்புடைய பதிவுதாரர்கள் அடையாள அட்டை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டை, கல்வி அசல் சான்றிதழ்கள் மற்றும் குடும்ப அட்டை ஆகியவைகளுடன் வருகிற 18-ம் தேதி நேரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வந்து தங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும் விவரங்களை சரிபார்த்து அறிந்து கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட நாளுக்கு பின் வருகின்றவர்களின் கோரிக்கைகள் எக்காரணம் ஏற்கப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...