நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மாயமான விமானம்: கோடியக்கரையில் 2-வது நாளாக தேடுதல்

நாகை மாவட்டம்,வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பரப்பில் காணாமல் போன கடலோர காவல்படை விமானத்தை தேடும் பணி 2-வது நாளாக சனிக்கிழமை

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:44 am

கே.பி. அம்​பி​கா​பதி

நாகை மாவட்டம்,வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பரப்பில் காணாமல் போன கடலோர காவல்படை விமானத்தை தேடும் பணி 2-வது நாளாக சனிக்கிழமை நடைபெற்றது.

மாயமான கடலோரக் காவல் படைக்கு சொந்தமான டார்னியர் விமானத்தை கோடியக்கரையில் பாராமோட்டாரில் பறந்து தேடும்பணி கடலோரக் காவல் படை ஏடிஜிபி சைலோந்திரபாபு முன்னிலையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த நிலையில்,சனிக்கிழமை காலையிலும் வனப் பரப்புக்குள் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டன.இதில்,வனத்துறை,உள்ளூர் காவல்துறையைச் சேர்ந்த 30 பேர் ஈடுபட்டனர்.ஏடிஜிபி சைலேந்திரபாபு காரைக்கால் வழியே சென்னை சென்றநிலையில், முக்கியமான அதிகாரிகள் பங்கேற்கவில்லை.

இதனிடையே,காரைக்கால் அருகே விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து சிக்னல் கிடைப்பதாக தகவல் பரவியதையடுத்து தேடும்பணியில் கவனம் குறைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.