தொடர் மழையால் டிராவை நோக்கி நகரும் டெஸ்ட் போட்டி!
அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மோமினுள் விக்கெட் ஹர்பஜனுக்குக் கிடைத்தது


இந்தியா - வங்கதேசம் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4-வது நாளும் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் இந்த டெஸ்ட் போட்டி டிரா ஆகும் நிலைமையில் உள்ளது.
ஃபதுல்லாவில் கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில், இந்திய பேட்ஸ்மேன்கள் அருமையாக ஆடினார்கள். மழை பாதிப்புக்கு நடுவே முரளி விஜய்யின் சதமும், அஜிங்கியா ரஹானேவின் அசத்தலான ஆட்டமும் கைகொடுக்க, 3-ஆம் நாள் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 462 ரன்கள் எடுத்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் 2 ரன்களுடனும், ஹர்பஜன் சிங் 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
வங்கதேசம் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளையும், ஜுபேர் ஹூசைன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். போட்டி முடிவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளதாலும், மழை பாதிப்பு இருப்பதாலும் இந்த ஆட்டம் டிராவில் முடிய வாய்ப்பிருப்பதாக உள்ளதால் இன்று முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார் கோலி.
பிறகு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த வங்கதேச அணி 6-வது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. தமிம் இக்பால், அஸ்வின் பந்துவீச்சில் 19 ரன்களில் அவுட் ஆனார். மோமினுள் ஹக் 30 ரன்களிலும் கேப்டன் முஷ்பிகுர் ரஹீம் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். பிறகு மழையால் ஆட்டம் மீண்டும் தடைபட்டது.
4-வது நாள் ஆட்டமுடிவில், வங்கதேச அணி 30.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்தது. அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மோமினுள் விக்கெட் ஹர்பஜனுக்குக் கிடைத்தது. இம்ருள் கயெஸ் (59), ஷகிப் அல் ஹசன்(0) ஆகியோர் களத்தில் உள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...