விருதுநகர் மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
விருதுநகர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் நிகழாண்டில் செயல்படுத்தப்பட உள்ள பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் கடனுதவி பெற இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்


விருதுநகர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் நிகழாண்டில் செயல்படுத்தப்பட உள்ள பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் கடனுதவி பெற இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:
இம்மாவட்டத்தில் தாட்கோ மூலம் வேளாண் நிலம் வழங்கும் திட்டம், வேளாண் நில மேம்பாட்டு திட்டம், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர் வேலைவாய்ப்பு திட்டம், மகளிர் சுய உதவிக்குழு சுழல் நிதி திட்டம், மகளிர் சுய உதவிக்குழு பொருளாதார கடன் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் ஆதிதிராவிடர்களாக இருக்க வேண்டும்.
அதோடு, குடும்ப ஆண்டு வருமானம் அதிகபட்சம் ரூ.1 லட்சம் ஆகும். மேலும், இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் பயன்பெற 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இதேபோல், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சுழல் நிதி மற்றும் பொருளாதார திட்டத்தில் கடன் பெற விண்ணப்பிப்போருக்கு வயது வரம்பு 18 வயது முதல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.
எனவே மேற்குறிப்பிட்ட திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் விண்ணப்பங்களை http://application.thatco.com என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பத்தை பதிவு செய்யும் போது குடும்ப அட்டை, வருவாய் மற்றும் இருப்பிடச் சான்று, கல்வித் தகுதி, கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் மற்றும் திட்ட அறிக்கையுடன் புகைப்படத்தையும் இணைத்து அனுப்ப வேண்டும். அதேபோல், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் சுழல் நிதி மற்றும் பொருளாதார திட்டத்தின் அடிப்படையில் கடன்பெற விண்ணப்பிக்கும் குழுக்கள் மகளிர் திட்டம், புதுவாழ்வு திட்டத்தின் மூலம் பெறப்பட்ட தரச்சான்று, வங்கி செல்லேடு, தீர்மான நகல், குழு உறுப்பினர்களின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களையும் ஸ்கேன் செய்து விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்வது அவசியம் ஆகும்.
பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தலைமை அலுவலகத்தால் பரிசீலனை செய்யப்படும். அதைத் தொடர்ந்து நேர்காணல் நடத்தப்படும் இடம், நேரம் ஆகிய விவரங்கள் குறித்து கடிதம் மூலம் தெரிவிக்கப்படும். மேலும், இது குறித்த விவரங்களை பெற ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தாட்கோ அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையலாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...