திருச்சுழி அருகே வேன் மோதி மில் தொழிலாளி சாவு: ஒருவர் படுகாயம்
திருச்சுழி அருகே வேன் விபத்தில் படுகாயம் அடைந்த மில் தொழிலாளி செவ்வாய்கிழமை நள்ளிரவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


திருச்சுழி அருகே வேன் விபத்தில் படுகாயம் அடைந்த மில் தொழிலாளி செவ்வாய்கிழமை நள்ளிரவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிகார் மாநிலத்தைச் சேர்ந்த சலோமியாவின் மகன் பியாஸ்கான்(19). இவர் உள்ளிட்ட அம்மாநிலத்தைச் சேர்ந்த சிலர் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், செவ்வாய்கிழமை மாலையில் வேலை முடிந்து திருச்சுழி-கல்லூரணி சாலை புதுப்பாலத்தில் பியாஸ்கானும், அவரது நண்பரும் நடந்து சென்று கொண்டிருந்தார்களாம்.
அப்போது, பரமக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கிச் சென்ற வேன் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தொழிலாளர்கள் மீது மோதியது. இதில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜோதிபியாவின் மகன் ஜமாலுதின் அலான்(25), பியாஸ்கான் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே காயம் அடைந்தவர்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும், ஜமாலுதின் அலான் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உயிரிழந்தார்.
இது தொடர்பாக எம்.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் பியாஸ்கான் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பரமக்குடியைச் சேர்ந்த வேன் டிரைவர் சோமசுந்தரம்(58) என்பவரை கைது செய்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரி்த்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...