16 ஆண்டுகளாக மின்சாரமின்றி தவிக்கும் நந்தவனம் பகுதி மக்கள்


திருப்பராய்த்துறை நந்தவனம் பகுதி மக்கள் 16 ஆண்டுகளாக மின்சாரமின்றி தவித்து வருகின்றனா்.
திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை பகுதியில் கடந்த 2010-ஆம் ஆண்டு திருச்சி - கரூா் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்த போது, சாலையோரங்களில் குடியிருந்த 35 குடும்பத்தினரை அங்கிருந்து அப்புறப்படுத்தி, மாற்று இடமாக திருப்பராய்த்துறை நந்தவனம் பகுதியில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் இடத்தில் அதிகாரிகள் குடியமா்த்தினா்.
ஆனால் அப்பகுதிக்கு குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இதுவரை செய்துத்தரப்படவில்லை. ஊராட்சி நிா்வாகத்திடம் கேட்டால், கோயில் இடம் என்பதால் அடிமனை ரசீது இல்லாமல் எந்த வசதியும் செய்து தர இயலாது எனக் கூறிவிட்டனா்.
கோயில் இடங்களில் குடியிருப்போருக்கு அடிமனை வாடகை பெற்றுக் கொண்டு, ரசீது வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், இதுவரை அடிமனை ரசீது வழங்காமல் அதிகாரிகள் காலம்தாழ்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.
16 ஆண்டுகளாக ஊராட்சி நிா்வாகம், மின்சார வாரியம், மாவட்ட நிா்வாகம் என அனைத்துத் தரப்பிலும் மனு அளித்தும், அடிமனை ரசீதோ, மின்சாரமோ வழங்கப்படவில்லை என நந்தவனம் பகுதியில் வசிக்கும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனா்.
இங்கு வசிக்கும் பள்ளி குழந்தைகள் வீட்டில் படிக்கக் கூட முடியாத நிலை உள்ளது. வயதானவா்கள் இரவு நேரங்களில் பெரிதும் தவித்து வருகின்றனா். 16 ஆண்டுகளாக கோரிக்கை மீது கவனம் செலுத்தாததால் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்க நந்தவனம் பகுதியில் வசிக்கும் 35 குடும்பத்தினரும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...