ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

அப்துல் கலாம் திருமணம் செய்துகொள்ளாதது ஏன்?

திருமணம் என் கனவுகளைச் சிதைத்துவிடும். என் கனவும் நம்பிக்கையும் வேறு. ஒரு குடும்பத் தலைவனாக...

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:06 am

ச. ந. கண்ணன்

நீங்கள் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்கிற கேள்வியை பலமுறை எதிர்கொண்டுள்ளார் கலாம்.

தும்பா மையத்தில் வேலை பார்த்தபோது, கலாம் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று அவருடைய குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் பலமுறை அழுத்தம் கொடுத்தார்கள். ஆனால் கலாம் அதில் ஈடுபாடு காட்டவேயில்லை. உன் திருமணத்துக்கு வருகை தரும் சாக்கிலாவது நாங்கள் ராமேஸ்வரம் பார்க்கவேண்டும் என்று கலாமின் நண்பர்கள் சொன்னதுண்டு. ஆனால் அது இறுதிவரை நிறைவேறாமலே போய்விட்டது.

திருமணம் குறித்த கேள்விக்கு கலாமின் பதில்: 

‘திருமணம் என் கனவுகளைச் சிதைத்துவிடும். என் கனவும் நம்பிக்கையும் வேறு. ஒரு குடும்பத் தலைவனாக நான் குடும்பத்துக்கும் நேரமும் உழைப்பையும் கொடுத்தாக வேண்டும். அங்கே என் லட்சியம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. லட்சியமா, குடும்பமா என்றால் குடும்பம் என் லட்சியத்துக்குப் பின்னால்தான். என்னுடைய இந்தக் கோட்பாட்டினால் ஒரு பெண்ணின் வாழ்க்கையும் பாழாகிவிடக்கூடாது. ஆக, இறுதிவரை நான் இப்படி இருப்பதுதான் சிறந்தது. என்னை என் போக்கில் விட்டுவிடுங்கள்’ என்று தன் மீது அக்கறை செலுத்தி கேள்வி கேட்டவர்களிடம் இந்தப் பதிலை அளித்துள்ளார் கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.