செம்மர கட்டை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டிஎஸ்பியின் நீதிமன்ற காவல் ஜூலை 23-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மாதனூர் பாலூரை சேர்ந்த பா.ம.க பிரமுகர் சின்னபையன் செம்மரக்கட்டை தகராறில் கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கு தொடர்பாக வெங்கடேசன், தங்கராஜ், பெருமாள், சத்தியமூர்த்தி ஆகிய 4 பேரையும் ஆம்பூர் கிராமிய காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். மேலும் செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் வேலூர் அலமேலுரங்காபுரத்தை சேர்ந்த நாகேந்திரன் - ஜோதிலட்சுமி தம்பதியை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில் கடத்தலில் வேலூர் கலால் டிஎஸ்பி தங்கவேல் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
நாகேந்திரன் வீட்டிலிருந்து 3.5 டன் செம்மர கட்டைகள், ரூ.32 இலட்சம் ரொக்கம், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து டிஎஸ்பி தங்கவேலு தலைமறைவானார். டிஎஸ்பி தங்கவேலு கூறியதின் பேரில் கொலை செய்யப்பட்ட பாமக பிரமுகர் சின்னபையனின் கோழி பண்ணையிலிருந்த செம்மரக் கட்டைகளை லாரியில் கடத்திய காஞ்சிபுரத்தை சேர்ந்த கோபு, லோகநாதன், மாரியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போலீஸôரின் தீவிர தேடுதலுக்கு பிறகு தலைமறைவான டிஎஸ்பி தங்கவேல் காட்பாடியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து டிஎஸ்பி தங்கவேல் ஜாமின் கேட்டு ஆம்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட நீதிமன்றத்திலும் அவரது ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டு நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் டிஎஸ்பி தங்கவேல் மற்றும் கோபு, லோகநாதன், மாரியப்பன் ஆகிய 4 பேரின் நீதிமன்ற காவல் நிறைவடைவதையொட்டி அவர்கள் ஆம்பூர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி ஆனந்தராஜ் 4 பேரின் நீதிமன்ற காவலை வருகிற ஜூலை 23ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து டிஎஸ்பி தங்கவேல் உள்ளிட்ட 4 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லபட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

