சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விருதுநகர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு தலைக்கவசம் விற்ற கடைகளுக்கு அபராதம்

விருதுநகர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு தலைக்கவசம் விற்ற 11 கடைக்காரர்கள் மீது தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:55 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு தலைக்கவசம் விற்ற 11 கடைக்காரர்கள் மீது தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இருசக்கர வாகனம் ஓட்டுகிறவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் கடந்த 1-ம் தேதி முதல் வாகன ஓட்டுநர்கள் தலைக்கவசத்தை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இதைத் தொடர்ந்து தலைக்கசவம் விற்பனை நிலையங்களில் விநியோகமும் மும்முரமாக நடந்து வருகிறது. தற்போது, இதன் தேவை அதிகரிப்பதை கருத்திற்கொண்டு கடைகளில் இருப்பு வைத்துக் கொண்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக இருசக்கர வாகன ஓட்டுகிறவர்களிடம் இருந்து ரகசிய தகவல் வந்தது.

அதன் அடிப்படையில் மாவட்ட தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் மைவிழிச்செல்வி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது ஆய்வில் தெரியவந்தது. இதன் பேரில்   ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் விலைக்கு விற்ற 11 கடைகள் மீது தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல், தலைக்கவசங்களை கூடுதல் விலைக்கு விற்றால் ரூ.20 ஆயிரம் வரையில் அதிகமாக அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.