சாத்தூர் அருகே அனுமதியின்றி வைத்திருந்த வெடிபொருள்கள் பறிமுதல்
சாத்தூர் அருகே கல்குவாரியில் அனுமதியின்றி வைத்திருந்த வெடிபொருள்களான ஜெலட்டின் குச்சி, டெட்டனேட்டர் உள்ளிட்டவைகளை திங்கள்கிழமை போலீஸார் பறிமுதல் செய்தனர்.


சாத்தூர் அருகே கல்குவாரியில் அனுமதியின்றி வைத்திருந்த வெடிபொருள்களான ஜெலட்டின் குச்சி, டெட்டனேட்டர் உள்ளிட்டவைகளை திங்கள்கிழமை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சாத்தூர் அருகே அருணாச்சலபுரம் பகுதியில் உள்ள கல்குவாரியில் அனுமதியின்றி வெடிபொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் க்யூ பிரிவு காவல் ஆய்வாளர் சாந்தலட்சுமி தலைமையில் போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் இதே பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரின் கல்குவாரியில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு 163 டெட்டனேட்டர், 44 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடிப்பதற்கு பயன்படுத்தப்படும் 300 மீட்டர் வயர் ஆகியவைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. உடனே வெடிபொருள்களை பறிமுதல் செய்து ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன் அடிப்படையில் கல்குவாரி உரிமையாளர் வெள்ளைச்சாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...