ஆம்பூர் வன்முறை சம்பவம் குறித்து தமிழக அரசியல் கட்சிகள் மௌனம் கலைந்து அதுகுறித்து கருத்து தெரிவிக்க வேண்டுமென தமிழக பாஜக துணைத் தலைவர் வானதி சீனிவாசன் சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை பேட்டியளித்தபோது தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
வாக்கு வங்கி அரசியலுக்காக மௌனம் காக்கும் தமிழக அரசியல் கட்சிகள் ஆம்பூர் வன்முறை குறித்து தங்கள் மௌனம் கலைந்து கருத்து தெரிவிக்க வேண்டும். ஆம்பூர் வன்முறை குறித்து ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு காரணமான ஆம்பூர் தொகுதி எம்எல்ஏவை கைது செய்ய வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. ஆம்பூரில் நடந்த வன்முறை அத்துமீறிய நடவடிக்கையாகும். வேலூர் மாவட்ட எஸ்பி முதல் காவலர்கள் வரை தாக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பெண் காவலர்கள் மிகமிக மோசமாக நடத்தப்பட்டுள்ளனர். பெண் காவலர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசு உதவிபுரிய வேண்டும். மிக மோசமான வகையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டனத்திற்குரியதாகும்.
ஆனால் பாதிக்கப்பட்ட காவலர்களை உள்துறை செயலரோ, காவல் துறை உயரதிகாரிகளோ சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறவோ, அவர்களுக்கு உதவிபுரியாமல் இருப்பது வேதனையளிப்பதாக உள்ளது. சமூக அமைதியை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆம்பூரில் நடந்ததை வெளி உலகிற்கு தெரியாமல் போலீஸார் மறைப்பது என்பது நாளை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். காவல் துறையினருக்கே இத்தகைய நிலை என்றால் சாதாரண பொதுமக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் அச்சத்தில் உள்ளனர் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் ஆம்பூரில் இந்து சமுதாய மக்கள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து எந்த ஒரு அரசியல் கட்சியும் குரல் கொடுக்காமல் மௌனம் காக்கின்றனர். அதனால் சட்டம் மதம் சார்ந்ததாக இருக்கின்றதோ என்ற எண்ணம் இந்துக்கள் மத்தியில் எழுந்துள்ளது என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


