சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விருதுநகரில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளில் சி.சி.டி.வி கேமார பொறுத்த நடவடிக்கை

பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதிகளில் அசம்பாவித சம்பவங்களை கட்டுப்படுத்தவும், போக்குவரத்துக்களை ஒழுங்குபடுத்தும் வகையில் 64

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:54 am

எஸ். பாண்டியன்

பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதிகளில் அசம்பாவித சம்பவங்களை கட்டுப்படுத்தவும், போக்குவரத்துக்களை ஒழுங்குபடுத்தும் வகையில் 64 இடங்களில் சி.சி.டி.வி கேமார பொறுத்துவதற்கு காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.

விருதுநகரில் கூட்ட நெரிசல் மற்றும் நடந்து செல்லும் பெண்களை வழிமறித்து நகை பறிப்பு சம்பவங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்தும் வகையில் 64 இடங்களில் கேமரா மற்றும் 16 ஒளிரும் விளக்குகள், 4 இடங்களில் தானியங்கி சிக்னல் விளக்குகளையும் காவல் துறை மூலம் ரூ.19 லட்சம் செலவில் தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், நகரில் போக்குவரத்து ஆகியவைகளை ஒழுங்குபடுத்தும் வகையில் ஆத்துப்பாலம், எம்.ஜி.ஆர்.சிலை சந்திப்பு, அல்லம்பட்டி முக்குரோடு, சிவகாசி சாலை ஆகிய இடங்களில் தானியங்கி சிக்னல் விளக்குகளும் பொறுத்தப்பட இருக்கிறது. அதேபோல், வழிப்பறி சம்பவங்களை தடுக்கும் வகையில் அரசு போக்குவரத்து கழகம், மேற்கு காவல் நிலையம் முக்கு ரோடு,

கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளி, ஸ்டேட் பேங்க், கார்னேசன் முக்கு, மாரியம்மன் கோயில், மெயின் பஜார், எம்.ஜி.ஆர்.சிலை, புது பேருந்து நிலையம், சிவகாசி வாகன சோதனைச் சாவடி, பாத்திமா நகர் முக்கு சாலை, பர்மா காலனி முக்கு சாலை, மாவட்ட மைய நூலகம் முக்கு சாலை, மீனாம்பிகை பங்களா, புல்லலக்கோட்டை முக்கு சாலை, பழைய பேருந்து நிலையம் உள்ளே வெளியே, ராமமூர்த்தி சாலை, அல்லம்பட்டி பாலம் மற்றும் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் வெளிச்சம் இல்லாத நேரங்களிலும் 500 மீட்டர் தூரம் வரையில் சுற்றி தெளிவாக படம் பிடிக்க கூடிய 16 நவீன கேமராக்களும், மற்ற 48 இடங்களில் 50 மீட்டர் சுற்றளவில் படம் பிடிக்கும் வகையில் பொறுத்தப்பட இருக்கிறது.

இவை அனைத்தும் கேபிள்கள் மூலம் இணைக்கப்பட்டு மேற்கு காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கணிப்பொறி கட்டுப்பாட்டு அறையில் தகவல்களை சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து நிகழ்வுகளையும் ஒரு மாதத்திற்கு சேமிக்கும் வகையில் நவீன கணிப்பொறி சாதனங்கள் பொறுத்தப்பட்டு கண்காண்ப்பு பணியிலும் தொழில்நுட்ப பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.