நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்:பாதிக்கப்பட்டவர்கள் கடலோரக் காவல் நிலையத்தில் புகார் 

கோடியக்கரைக்கு அப்பால் மீன்பிடித்த நாகை செருதூர் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்கி,மீன்படி சாதனங்களை சேதப்படுத்தியதோடு,பொருள்களை பறித்துக்கொண்டு விரட்டியடித்துள்ளனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:53 am

கே.பி. அம்​பி​கா​பதி

கோடியக்கரைக்கு அப்பால் மீன்பிடித்த நாகை செருதூர் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்கி,மீன்படி சாதனங்களை சேதப்படுத்தியதோடு,பொருள்களை பறித்துக்கொண்டு விரட்டியடித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மீனவர்கள் வேதாரண்யம் கடலோரக் காவல் நிலையத்தில் இன்று பிற்பகல் புகார் அளித்தனர். இந்த சம்பவத்தில்,34 படகுகளில் இருந்த 20 மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் தங்கராசு என்ற மீனவருக்கு காயம் ஏற்பட்டது.

15 டன் எடையுள்ள வலைகளை இலங்கை மீனவர்கள் சேதப்படுத்தியதோடு,ஜிபிஎஸ் கருவிகள்,செல்பேசி போன்றவைகளை இலங்கை மீனவர்கள் பறி்த்துச் சென்றதாக மீனவர்கள் அளித்துள்ள புகாரில் தெரிவித்தனர். இது குறித்து வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.