சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விருதுநகர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் சாவு

விருதுநகர் பகுதிகளில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் உயிரிழந்தனர்.விருதுநகர் அருகே அல்லம்பட்டி பகுதியைச் சேர்நதவர் மாரீஸ்வரன்(23). இவருக்கு அடிக்கடி

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:53 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் பகுதிகளில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் உயிரிழந்தனர்.

விருதுநகர் அருகே அல்லம்பட்டி பகுதியைச் சேர்நதவர் மாரீஸ்வரன்(23). இவருக்கு அடிக்கடி மூக்கிலிருந்து ரத்த கசிவு இருந்து வந்ததால் அவதிப்பட்டு வந்தாராம். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறராம். இதனால், மன அமைதியை இழந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வியாழக்கிழமை அதிகாலையில் தூக்கிட்டு கொண்டாராம். இது தொடர்பாக அவரது சகோதரர் செந்தில்குமார்(32) விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தாராம். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு:

திருச்சுழி அருகே இலங்கிப்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி(46). இவர் கட்டடங்களில் கம்பி கட்டுநராக தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், புதன்கிழமை இரவில் இப்பகுதியில் உள்ள ஒரு கட்டடப்பகுதியில் சென்ட்ரிங் போடுவதற்கான கம்பிகளை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அதையடுத்து மேலே தூக்கிச் செல்கையில் மின்கம்பியின் மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாராம். இது தொடர்பாக அவரது மனைவி சந்தனமாரி திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் செய்தாராம். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து தொழிலாளியின் சாவு குறித்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.