சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விருதுநகரில் துப்பாக்கி உரிமம் பெயர் மாற்ற ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்ற அரசு அலுவலர் கைது

துப்பாக்கி உரிமத்தை பெயர் மாற்றம் செய்து கொடுப்பதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்ற இளநிலை உதவியாளரை கையும் களவுமாக லஞ்சம் ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்ததால்

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:53 am

எஸ். பாண்டியன்

துப்பாக்கி உரிமத்தை பெயர் மாற்றம் செய்து கொடுப்பதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்ற இளநிலை உதவியாளரை கையும் களவுமாக லஞ்சம் ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகாசி பகுதியைச் சேர்ந்த அசோக்மேத்தாவின் மகன் அஜிஸ்மேத்தா(35). இவர் மெழுகுவர்த்தி ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், தனது தந்தையார் பெயரில் உள்ள ரிவால்வர் துப்பாக்கியின் உரிமத்தை, தனது பெயரில் மாற்றம் செய்து தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் துப்பாக்கி உரிமம் புதுப்பிக்கும் பிரிவில் கடந்த மாதம் 19-ம் தேதி விண்ணப்பம் அளித்தாராம். அதற்கு அப்பிரிவில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் சதீஸ்(35) துப்பாக்கி உரிமத்தை புதுப்பித்து பெயர் மாற்றம் செய்து தர ரூ.15 ஆயிரம் கேட்டாராம். இதையடுத்து பணம் கொடுக்காத காரணத்தால் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மீண்டும் வந்து பார்க்கும் போதும் அதே தொகையை கேட்டாராம். எனவே வியாழக்கிழமை கொண்டு வருவதாக தெரிவித்தாராம்.

இதற்கிடையே விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணைக்காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரனிடம் புகார் செய்தாராம். அதன் அடிப்படையில் வியாழக்கிழமை அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து அனுப்பியுள்ளனர். பின்னர் பிற்பகல் 12.30 மணிக்கு அஜிஸ்குமார், ஆட்சியர் வளாகத்தில் இ பிரிவு அலுவலர் தினேஷிடம் கொடுத்தாராம்.

அப்போது, அப்பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி வெங்கடேஸ்வரன் தலைமையில் சார்பு ஆய்வாளர் விஜயகாண்டீபன் உள்ளிட்ட போலீஸார் சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து அவரிடம் இருந்து 15 எண்ணம் கொண்ட ஆயிரம் ரூபாய் தாள்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரி்த்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.