இந்நிலையில் மழை இல்லாத காலங்களில் இரை தேடியும், தண்ணீருக்காகவும் வன விலங்குகளான யானை, மான், முள்ளம் பன்றி ஆகியவைகள் மலை அடிவாரப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து விடும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதோடு, அங்குள்ள பயிர்களையும், மரங்களையும் வேரோடு சாய்த்து நாசம் செய்தும் விடுகின்றன. இதனால், விவசாயிகள் பாதிப்படையும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதுபோன்று வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்கும் வகையில் குறிப்பிட்ட பகுதிகளில் யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் தண்ணீர் தொட்டிகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.