2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகரில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தந்தை, மகள் விழிப்புணர்வு பிரசாரம்

மதுக்கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என்பதை வலியிறுத்தி திங்கள்கிழமை விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உண்ணாவிரதப்  போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவி மற்றும் அவரது

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:30 am

எஸ். பாண்டியன்

மதுக்கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என்பதை வலியிறுத்தி திங்கள்கிழமை விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உண்ணாவிரதப்  போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவி மற்றும் அவரது தந்தையையும் மேற்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

மதுரை கே.புதூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தனின் மகள் நந்தினி. இவர்  சட்டக்கல்லூரி மாணவியாவர். தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி தந்தையும், மகளும் சைக்கிளில் சென்று மது பழக்கத்தால் ஏற்படும் சீரழிவுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதேபோல், இவர்கள் இருவரும் கடந்த 12-ம் தேதி சைக்கிளில் மதுக்கடைகளை மூட வலியுறுத்திய பதாகைகளுடன் விருதுநகர் வீதிகளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, குடியரசு தினநாளன்று  தனது தந்தையுடன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஏற்கனவே சட்டக்கல்லூரி மாணவி நந்தினி அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் விருதுநகர் தேசபந்து மைதானத்தி்ல விழிப்புணர்வு பதாகைகளுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் தந்தையும், மகளும் ஈடுபட முயற்சித்தனர். அப்போது, அங்கு விரைந்து வந்த போலீஸார் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரையும் கைது செய்து மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.