2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஆதிதிராவிடர் நலத்துறையில் சமையலர், துப்புரவு பணியாளர் காலியிடங்களுக்கு  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரை

விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் சமையலர், பகுதி நேர துப்புரவு பணியாளர் ஆகிய காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்படவுள்ளனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:29 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் சமையலர், பகுதி நேர துப்புரவு பணியாளர் ஆகிய காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்படவுள்ளனர்.

   இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் சனிக்கிழமை  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குயினர் நலத்துறை அலுவலரால் மேற்குறிப்பிட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பதிவு மூப்பு விவரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு 1.7.2014 அன்றைய நாளில் ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினருக்கு மட்டுமான இப்பணிக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள்ளும், தமிழில் எழுத படிக்கத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.

    சமையலர் பணிக்கு: முன்னுரிமையுடையோர் ஆதிதிராவிடர்(அருந்ததியினர் மற்றும் ஆதரவற்ற விதவை)-31.12.2014, ஆதரவற்ற விதவை-31.12.2014,  ஆதிதிராவிடர் கலப்பு திருமணம் புரிந்தோர்-17.11.2011, பழங்குடியினர்-31.12.2014 வரையும். முன்னுரிமையற்றோர்-ஆதிதிராவிடர்(அருந்ததியினர்) இருபாலரும்-4.12.1997, பெண்கள் மட்டும்-12.8.2005, ஆதிதிராவிடர் முன்னுரிமையற்றோர் (இருபாலரும்)-29.7.1998 வரையும் இருக்க வேண்டும்.   

பகுதிநேர துப்புரவு பணியாளர்: முன்னுரிமையுடையோர்-ஆதிதிராவிடர்(அருந்ததியினர்) மற்றும் முன்னிரிமையுடையோர்(ஆதரவற்ற விதவை)-31.12.2014, ஆதிதிராவிடர் முன்னுரிமையுடையோர் (ஆதரவற்ற விதவை)-31.12.2014, ஆதிதிராவிடர் முன்னுரிமையுடையோர்(கலப்பு திருமணம் புரிந்தோர்)-17.10.2011, பழங்குடியினர் முன்னுரிமையுடையோர்-31.12.2-14 வரையும். முன்னுரிமையற்றோர்-ஆதிதிராவிடர்(அருந்ததியினர் பெண்கள் மட்டும்)27.10.1997, ஆதிதிராவிடர்(அருந்ததியினர்) இருபாலரும்-16.8.1995, ஆதிதிராவிடர் (பெண்கள் மட்டும்)-26.6.2001, ஆதிதிராவிடர்(இருபாலரும்)-14.10.1998 வரையும் பதிவு மூப்பு இருக்க வேண்டும்.
 
மேற்காணும் பணியிடங்களுக்கு ஆதிதிராவிடர், அருந்ததியினர் மற்றும் பழங்குடியினர் மட்டுமே பரிந்துரைக்கப்பட இருக்கின்றனர். அதனால், இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அசல் கல்விச் சான்றுகள் மட்டும் குடும்ப அட்டை ஆகியவைகளுடன் சூலக்கரை தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வந்து பதிவு மூப்பு விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும், குறிப்பிட்ட நாளுக்கு பின் வருகின்றவர்களின் கோரிக்கை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.