சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

அரசு மருத்துவமனை முதல்வர்கள் இடமாற்றம்

தமிழகத்தில் உள்ள 7 அரசு மருத்துவமனை முதல்வர்கள் (டீன்கள்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 அரசு மருத்துவமனைகளுக்கு

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:29 am

ஜெயப்பாண்டி

தமிழகத்தில் உள்ள 7 அரசு மருத்துவமனை முதல்வர்கள் (டீன்கள்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 அரசு மருத்துவமனைகளுக்கு புதிய முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 மதுரை அரசு மருத்துவமனை டீனாக இருந்த டாக்டர் பி. சாந்தகுமார் தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவமனை டீன் டாக்டர் எட்வின்ஜோ கோவைக்கும், டாக்டர் ரேவதிகயிலைராஜன் கோவையிலிருந்து மதுரைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 டாக்டர் மீனாட்சிசுந்தரம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலிருந்து திருவாரூர் அரசு மருத்துவமனைக்கும், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலிருந்து டாக்டர் நாராயணபாபு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீனாக உள்ள டாக்டர் குணசேகரன் திருவண்ணாமலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  புதிய முதல்வர்கள்: மதுரை பொது மருத்துவத்துறை தலைவராக உள்ள டாக்டர் வடிவேல்முருகன் கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கும், அறுவைச் சிகிச்சைப் பிரிவு டாக்டர் நஷீர் தர்மபுரிக்கும், கோவையைச் சேர்ந்த டாக்டர் ஐசக்மோசஸ் செங்கல்பட்டு மருத்துவமனைக்கும் புதிதாக டீனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

  கோவையிலிருந்த மதுரைக்கு இடமாறுதலாகி வரும் டாக்டர் ரேவதி கயிலைராஜன் மதுரை மருத்துவக் கல்லூரியில் பயின்றவர். அரசு மருத்துவமனையில் பிரசவச் சிகிச்சைப் பிரிவில் துறைத் தலைவராக திறன்படச் செயல்பட்டவர். அவரது பணித்திறமைக்காக மாவட்ட, மாநில அளவில் பல பாராட்டுகளைப் பெற்றவர். இவரது கணவர் பிரபல நரம்பியல் துறை பேராசிரியர் டாக்டர் கயிலைராஜன். இவர்களது மகன் டாக்டர் ராஜராஜன் மருத்துவக் கல்லூரியல் மாநில அளவில் தஙக்ப்பதக்கம் பெற்று அரசு மருத்துவராக உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.