திருச்சி விமான நிலையத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை அதிகாலை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 2.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 6 பெண்கள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
மலேசியாவிலிருந்து சென்னை வழியாக திருச்சி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் திருச்சி வந்தது. இதில் பயணம் செய்த சிலர் மீது சுங்கத் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவர்களை சோதனையிட்டனர்.
அப்போது மதுரையைச் சேர்ந்த ரகுமான், ஜமீனா பேகம், ஜபருன்னிசா, ஆயிசா பேகம், சிவகங்கையை சேர்ந்த ரஷ்யா பேகம், மெகர்பானு, இளையாங்குடியைச் சேர்ந்த அமீதா பேகம் ஆகிய 7 பேரும் தங்களது உடைமைகளில் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் 7 பேரும், சிங்கப்பூரிலிருந்து சிலரால் கடத்தி வரப்பட்ட தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் பெற்றுக்கொண்டு அங்கு மலேசியாவிலிருந்து சென்னை வழியாக திருச்சிக்கு வந்த ஏர் - இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்தது தெரியவந்தது.
இதேபோல மலேசியாவிலிருந்து திருச்சிக்கு வந்த மலிண்டோ விமானத்தில் வந்த பயணிகளிடமும் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது திருச்சி தெப்பக்குளத்தை சேர்ந்த இப்ராம்ஷா என்பவர் தான் கொண்டு வந்த ஸ்பீக்கர் பாக்சில் மறைத்து வைத்திருந்த 173 கிராம் தங்கத்தையும், சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரகீம் என்பவர் பியானோவில் மறைத்து வைத்திருந்த 323 கிராம் தங்கத்தையும், திண்டுக்கல் கனி என்பவர் ஊட்டச்சத்து பவுடர் டப்பாவில் மறைத்து வைத்திருந்த 237 கிராம் தங்கத்தையும், சென்னை எல்லீஸ் பகுதியை சேர்ந்த முகமது என்பவர் தொலைக்காட்சி சர்க்யூட் போர்டில் மறைத்து வைத்திருந்த 201 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல சனிக்கிழமை அதிகாலை மலேசியாவிலிருந்து திருச்சிக்கு வந்த மலிண்டோ விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனையிட்டதில் அதில் பயணம் செய்த அபுபக்கர் என்பவர் தான் கொண்டுவந்த 5 கரண்டிகளில் தலா 40 கிராம் வீதம் 200 கிராம் தங்கம் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு நாளில் 12 பேரிடமிருந்து 2.5 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

