ராமநாதப்புரத்தை சேர்ந்த விக்கி பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு செல்வதற்காக கடை உரிமையாளரான மைக்கேல்ராஜிடம் பணம் கேட்டதாகவும், அவர் இல்லை என்று மறுத்ததால் விக்கி மைக்கேல்ராஜின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி ஆரோக்கிய வனிதாவிடம் பணம் கேட்டதாகவும், அவரும் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த விக்கி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முதலில் ஆரோக்கிய வனிதாவை குத்தியுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த அவரது குழந்தைகளான டேனிஷ், பிரியங்கா ஆகிய இருவரும் ஓடிவந்தனர். விக்கி இந்த இரண்டு பேரையும் கத்தியால் குத்தினான். பின்னர் வீட்டிலிருந்த இரும்பு பீரோவிலிருந்து ரூ.40 ஆயிரம் ரொக்கம், மற்றும் ஆரோக்கிய வனிதா அணிந்திருந்த 5 சவரன் தங்க நகையையும் கொள்ளையடித்துக் கொண்டு தேநீர் கடையில் வந்து தங்கிவிட்டான் என்று விசாரணையில் தெரியவந்தது.