தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் மாவட்டத்தில் காய்ச்சல் ஏற்பட்டால் உடனே அரசு மனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டுகோள்

விருதுநகர் மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்கு சேர்த்தும், குடியிருப்பு பகுதிகளை சுற்றியும் தண்ணீர் தேங்காமல்

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:21 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்கு சேர்த்தும், குடியிருப்பு பகுதிகளை சுற்றியும் தண்ணீர் தேங்காமல் இருக்க வேண்டும் என ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதியில் பருவ கால மாற்றத்தினால் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரையில் ராஜபாளையம் பகுதியில் 10 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் 2 பேரும் என மொத்தம் 12 சிறுவர், சிறுமிகள் மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ராஜபாளையம் பகுதியில் மட்டும் ஒவ்வொரு வார்டுக்கும் தலா 5 பேர் கொண்ட  மருத்துக்குழுவினர் நியமிக்கப்பட்டு வீடுகள் தோறும் சென்று சிகிச்சை மற்றும் கொசுக்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியிலும் முகாமிட்டு சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இப்பகுதியில் என்ன காரணத்தினால் மர்ம காய்ச்சல் பரவுகிறது என்பது குறித்து உயர்நிலை மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்து தடுப்பதற்கான வழிமுறைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து ஆட்சியர் வே.ராஜாராமன் கூறுகையில், பொதுமக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை அரசுமருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்கு சேர்க்க வேண்டும். அதேபோல், அங்கு தொடர் சிகிச்சை பெற்று வருவதோடு, மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளையும் பின்பற்ற வேண்டும். இதற்காக அரசு மருத்துவமனைகளில் தனிவார்டுகள் அமைக்கப்பட்டு 24 மணிநேரமும் மருத்துவக்குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், அதனால் பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்றார்.

இது தொடர்பாக பொது மருத்துவம் மற்றும் காதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர்.கதிரேசன் கூறுகையில், சாதாரணமாக உடலில் 1.50 லட்சம் முதல் 2 லட்சம் ரத்த தட்டுக்கள் இருக்க வேண்டும். அது 50 ஆயிரமாக குறையும் போதுதான் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதற்கான ரத்த தட்டுக்கள் செலுத்தும் உடலில் செலுத்தும் வசதி அரசு மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளது. இதுபோன்ற காரணங்களால் தான் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சிகிச்சைக்கு கொண்டு வர வேண்டும் என்கிறோம். ஏற்கனவே பொது சுகாதார துறை மூலம் தனியார் மருத்துவமனையின் மருத்துவர்களுக்கும் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.