விருதுநகர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி மன்ற அரங்கில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆட்சியர் வே,ராஜாராமன் பங்கேற்று இறுதி வாக்காளர்கள் பட்டியலை


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டபேரவை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சி நிர்வாகிகளின் முன்னிலையில் ஆட்சியர் திங்கள்கிழமை வெளியிட்டார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி மன்ற அரங்கில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆட்சியர் வே,ராஜாராமன் பங்கேற்று இறுதி வாக்காளர்கள் பட்டியலை வெளியிட்டு பேசுகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி இம்மாவட்டத்தில் அடங்கியுள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்.15 ம் தேதி தொடங்கி, செப்.10 வரையில் பெறப்பட்ட தகுதியான புதிய வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அப்போது, 43322 படிவங்கள் வரையில் பெறப்பட்டு பரிசீலனை செய்து தகுதியான 40124 பேர் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் அனைவருக்கும் வருகிற 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினத்தன்று வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பட்டியல் அந்தந்த நகராட்சி அலுவலகம், ஊராட்சி அலுவலகம், வாக்கு சாவடிகளில் பார்வைக்கு வைக்கப்படும். இதில், பெயர் சேர்த்தல், நீத்தல், திருத்தம் செய்ய விரும்புவோர், தொடர் திருத்த காலத்தில் அந்தந்த பகுதி வட்டாட்சியர் நகராட்சி ஆணையாளர் அல்லது வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரிடம் மனுக்களை வழங்கலாம் என ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்தார்.இதில் தொகுதி வாரியாக மொத்தம் வாக்காளர்கள் எண்ணிக்கை விவரமாவது:
ராஜபாளையம் தொகுதியில் ஆண்-107950, பெண்-110560, இதரர் 20 என மொத்தம் 218530 வாக்காளர்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர்(தனி) தொகுதியில் ஆண்-111619, பெண்-113413, இதரர் 18 என மொத்தம் 225050 வாக்காளர்கள்.
சாத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் ஆண்-106775, பெண்-109757, இதரர்-13 என மொத்தம் 216545 வாக்காளர்கள்.
சிவகாசி தொகுதியில் ஆண்-112004, பெண்-115160, இதரர்-17 என மொத்தம் 227181 வாக்காளர்கள்.
விருதுநகர் தொகுதியில் ஆண்-100897, பெண்-101848, இதரர்-33 என மொத்தம் 202778 வாக்காளர்கள்.
அருப்புக்கோட்டை தொகுதியில் ஆண்-98789, பெண்கள்-101764, இதரர்-10 என மொத்தம் 200563 வாக்காளர்கள்.
திருச்சுழி தொகுதியில் ஆண்-99878, பெண்-101361, இதரர் 6 என மொத்தம் 201245 வாக்காளர்கள். இதில் 7 தொகுதியிலும் சேர்த்து மொத்தம் ஆண்-7379912, பெண்-753863, இதரர் 117 என மொத்தம் 14 லட்சத்து 91 ஆயிரத்து 892 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...