தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கூடுதல் வரதட்சணை: சித்ரவதை செய்ததாக கணவர் குடும்பத்தினர் மீது மனைவி புகார்: 4 பேர் மீது வழக்கு பதிவு

விருதுநகர் அருகே முத்துராமன்பட்டி சிவந்திபுரம் தெருவைச் சேர்ந்த வேல்ராமின் மகள் சக்திபூர்ணிமா(30). இவருக்கும் ரயில்வே பீடர் சாலையைச் சேர்ந்த அன்பழகனின் மகன் முத்துமுருகனுக்கும்

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:20 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் கணவர், மாமியார் உள்ளிட்ட 4பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே முத்துராமன்பட்டி சிவந்திபுரம் தெருவைச் சேர்ந்த வேல்ராமின் மகள் சக்திபூர்ணிமா(30). இவருக்கும் ரயில்வே பீடர் சாலையைச் சேர்ந்த அன்பழகனின் மகன் முத்துமுருகனுக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. அப்போது, 35 சவரன் நகை, ரூ.2 லட்சம் மதிப்பிலான பாத்திரங்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டதாம். இதைத் தொடர்ந்து திருமணமான இரண்டு மாதத்திலேயே நகை, ரொக்கத்தையும் முத்துமுருகனின் குடும்பத்தினர் வாங்கி வைத்துக் கொண்டார்களாம். இதையடுத்து கணவர் சென்னைக்குச் வேலைக்குச் சென்ற நிலையில், விருதுநகரில் மாமியார் விஜயா வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது, ஒவ்வொரு நாளும் கூடுதலாக வரதட்சணை வேண்டும் எனக் கூறி மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் சித்ரவதை செய்துள்ளனர். இதற்கு கணவரும் உடந்தையாக இருந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து நகை பணத்தை மீட்டுத் தர வலியுறுத்தி பெண்ணின் தந்தையார் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தாராம். இதை விசாரணை செய்து  நீதிமன்றம் உத்தரவிட்டதின் பேரில் சக்திபூர்ணிமாவின் கணவர் முத்து முருகன், அவரது தாய்மாமா பாக்யம், தாய் விஜயா, சகோதரி சாந்தி ஆகியோர் மீது விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.