தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தில் தாய், குழந்தை இறப்பைத் தொடர்ந்து உறவினர்கள் முற்றுகை

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே வி.அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூன் என்பவரின் மனைவி கனிமொழி. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த வியாழக்கிழமை விருதுநகர்

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:20 am

எஸ். பாண்டியன்

பிரசவத்தில் தாய், குழந்தை இறப்பைத் தொடர்ந்து சரியாக சிகிச்சை அளிக்கவில்லையெனக் கூறி விருதுநகர் அரசு மருத்துவமனையை உறவினர்கள் சனிக்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே வி.அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூன் என்பவரின் மனைவி கனிமொழி. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த வியாழக்கிழமை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகி்சசைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் வெள்ளிக்கிழமை பிற்பகலில் குழந்தை பிறந்துள்ளது. அதைத் தொடர்ந்து கனிமொழிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாம். இதற்கு மருத்துவர்கள் தீவிரமாக கிகிச்சை அளித்தும் பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சனிக்கிழமை காலையில் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு கனிமொழியின் உடலை வாங்க மறுத்து  மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் பிறந்த குழந்தையும் உயிரிழந்தது. இதையடுத்து மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தாலும், போதிய சிகிச்சை அளிக்காத காரணத்தாலும் தாயும், குழந்தையும் உயிரிழந்து விட்டதாக கூறினர். அதையடுத்து மருத்துவர்களை கண்டித்து கனிமொழியின் உறவினர்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதையடுத்து, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் போலீஸார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கனிமொழி உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.

இது தொடர்பாக மாவட்ட சுகாதார பிரிவு இணை இயக்குநர் கதிரேசன் கூறுகையில், சிகிச்சையில் எந்தக் குறைபாடும் இல்லை. அப்பெண் பிரசவத்திற்கு வரும் போதே பல்வேறு பாதிப்புகளுடன் வந்தாகவும், அதனால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.