ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 66 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு 

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 66  குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

Updated On :1 ஜனவரி 2015, 7:33 am

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 66  குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளை தொழிலாளர்களாக பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். அதன்படி 14 வயதுக்கு கீழ் உள்ளவர்களை வேலைக்கு வைத்திருக்கும், கடைக்காரர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மீட்கப்படும் குழந்தை தொழிலாளர்களை படிக்க வைப்பதற்காக கடந்த 2005ஆம் ஆண்டு குழந்தை தொழிலாளர் சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இந்த மையம் செயல்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 20 இடங்களில் இந்த சிறப்பு பயிற்சி மையம் செயல்படுகிறது.

இதுகுறித்து துறை அதிகாரி ஒருவர் கூறியது,  நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 20 குழந்தை தொழிலாளர் சிறப்பு பயிற்சி மையத்தில் மொத்தம் 515 பேர் பயின்று வருகின்றனர்.  கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் 66 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கு 8ஆம் வகுப்பு வரை கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதேபோல்  தையல் உள்ளிட்ட தொழிற்கல்வியும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.  இந்த மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம்தோறும் உதவித்தொகையாக ரூ.150 வழங்குகிறது. அந்த தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இவர்கள் பயிற்சி மையத்தை விட்டு செல்லும்போது மொத்தமாக அந்த பணம் கொடுக்கப்படுகிறது. 14 வயதை பூர்த்தியடைந்ததும், மாணவர்கள் அவர்களின் விருப்பப்படி படிக்கவோ அல்லது வேலை செய்யவோ அனுமதிக்கப்படுகிறார்கள் என்றார்.

குழந்தை தொழிலாளர்கள் ஆய்வை தீவிரப்படுத்த வேண்டும்:

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளிலும், கடைகளிலும் வேலை செய்துவரும், ஏராளமான குழந்தை தொழிலாளர்கள் இன்னும் மீட்கப்படாமலே உள்ளனர். தொழிற்சாலைகள், கடைகள், பேருந்து நிலையங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி குழந்தை தொழிலாளர்களையும், பிச்சை எடுக்கும் குழந்தைகளையும் மீட்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.