திருச்சி திருவெறும்பூர் அருகே குழந்தை கடத்தல் வழக்கில் மேலும் இருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஒரு சிறுவனை போலீஸார் மீட்டனர்.
கும்பகோணம் அருகே மேலகாவிரியை சேர்ந்த செல்வம் மகன் விஜயை (14) கடந்த 18-ம் தேதி மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். புகாரின் பேரில் கும்பகோணம், போலீஸார் வழக்குப் பதிந்து சிறுவனை கடத்திய கும்பலை தேடிவந்த நிலையில், திருவெறும்பூர் போலீஸார் கடந்த 5 நாள்களுக்கு முன்பு காந்தி நகரைச் சேர்ந்த ரஜினி (37), அர்ஜூனன் (30) ஆகியோரிடமிருந்து விஜயை மீட்டு அவர்களை கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட 2 பேரும் குழந்தைகளை கடத்தி திருட்டு தொழிலுக்கு அனுப்பும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும், இதுவரை கடத்திய குழந்தைகளை திருவெறும்பூர் காந்திநகர், ராம்ஜிநகர் போன்ற பகுதிகளில் திருட்டு தொழிலை கற்றுக் கொடுத்து, அவர்களை குஜராத் மாநிலம், சூரத் நகரில் பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பதும் தெரியவந்தது.மேலும் இந்த திருட்டு பின்னணியில் பெரிய கும்பல் இருப்பதும் தெரியவந்தது.
இதுவரை 15 குழந்தைகளை கடத்தியதாக அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக போலீஸார் தரப்பினர் தெரிவித்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டை, டாடா நகரைச் சேர்ந்த காளிதாஸ் மகன் மகேஷ்(எ)கனகவேல்(4) என்று சிறுவனை போலீஸார் கடந்த வியாழக்கிழமை மீட்டனர். மேலும், ஏற்கெனவே கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்க திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீஸார் நடிவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 25-ம் தேதி, திருவெறும்பூர் கக்கன் காலனியி்ல் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு வந்திருந்த மண்ணச்சநல்லூர், எஸ்.கண்ணணூர், சோழநகரைச் சேர்ந்த யூனிஸ்கான் மகன் பீர்முகமது(9) என்ற சிறுவனை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.
இது குறித்து புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு திருவெறும்பூர் ரயில் நிலையம் அருகே ஒரு சிறுவனுடன் சந்தேகம்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீஸார் பிடித்து விசாரித்ததில், அவர்கள் கக்கன்காலனி, சுங்கைய்யா மகன் சுப்பிரமணி(39), மதுரை மாவட்டம்,மேலூர் வட்டம், வாஞ்சினாபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னையா மகன் அழகர் (40), என்பதும், இவர்களுடன் இருந்த சிறுவன் யூனிஸ்கான் என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து விசாரணையில், மேற்கண்ட குழந்தை கடத்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும், தற்போது யூனிஸ்கானை வெளிமாநிலத்தில் விற்பதற்காக திருவெறும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சுப்பிரமணி, அழகர் ஆகியோரை கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து யூனிஸ்கானை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

