மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

விருதுநகர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு

விருதுநகர் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் கிடந்த ஆண் சடலத்தை ரயில்வே போலீஸார் மீட்டு கொலையா, தற்கொலையா என விசாரித்து வருகின்றனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:46 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் கிடந்த ஆண் சடலத்தை ரயில்வே போலீஸார் மீட்டு கொலையா, தற்கொலையா என விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே துலுக்கப்பட்டி-மணிப்பாறைப்பட்டி இடையே பொதுமக்கள் வியாழக்கிழமை கதிர் அறுவடை பணிக்காக சென்றார்களாம். அப்போது, தண்டவாளப்பகுதியில் தலை துண்டான நிலையில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது.இதைப்பார்த்து அப்பகுதி பொதுமக்கள் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து தூத்துக்குடி ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையா, தற்கொலையா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.