விருதுநகர் அருகே பூட்டியிருந்த வீடுகளில் புகுந்து 8 சவரன் நகை திருட்டு
விருதுநகர் அருகே பூட்டியிருந்த வெவ்வேறு வீடுகளின் கதவுகளின் பூட்டை உடைத்து 8 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்


விருதுநகர் அருகே பூட்டியிருந்த வெவ்வேறு வீடுகளின் கதவுகளின் பூட்டை உடைத்து 8 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ளது இனாம்ரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால்(48). இவர் குடும்பத்துடன் வெளியூர் வரையில் சென்று விட்டு வியாழக்கிழமை வீடு திரும்பினார்களாம். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு திடுக்கிட்டுள்ளார். பின்னர் உள்ளே சென்று பார்க்கையில் பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்து 2 சவரன் நகையை யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச்சென்றிருந்தனர்.
அதேபோல், இதே கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி(60). இவரது மகள் சந்திராதேவிக்கு குழந்தை பிறந்துள்ளதால் அதை பார்ப்பதற்காக குடும்பத்துடன் வெளியூர் சென்று இன்று திரும்பியுள்ளனர். அப்போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இரும்பு பீரோவில் இருந்த 6 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இது தொடர்பாக சூலக்கரை காவல் நிலையத்தில் இரண்டு பேரும் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஒரே கிராமத்தில் வெளியூர் சென்ற நேரத்தில் கதவின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...